டாய்லெட்டில் தொலைபேசி பயன்படுத்துவதால் என்னெல்லாம் பாதிப்புகள் வரும் தெரியுமா? இத கொஞ்சம் பாருங்க!

டாய்லெட்டில் தொலைபேசி பயன்படுத்துவதால் என்னெல்லாம் பாதிப்புகள் வரும் தெரியுமா? இத கொஞ்சம் பாருங்க!


Using mobile phones in toilet

வளர்ந்துவரும் டெக்னாலஜி உலகில் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் தொலைபேசி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பத்து விரல்களுடன் சேர்த்து பதினோராவது விரலாக அனைவர் கையிலும் தொலைபேசி உள்ளது. அதுவம் ஜியோ வந்தபிறகு மொபைல் டேட்டா இலவசம் என்பதால் எந்நேரம் பார்த்தாலும் தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டே உள்ளனர்.

இந்நிலையில் நம்மில் பலருக்கு டாய்லெட்டில் உட்கார்ந்து தொலைபேசி பயன்படுத்துவதும், தொலைபேசியில் பேசுவதும் வழக்கம். இவ்வாறு கழிவறையில் மறந்து தொலைபேசி பயன்படுத்துவது சரியா? தவறா? வாங்க பாக்கலாம்.

mobile

நீண்ட  நேரமாக டாய்லெட்டில் அமரும் போது  அழுத்தம் அதிகமாகி, ஆசன வாயை சுற்றி உள்ள ரத்த நாளத்தில் பெரிதும் அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக 
ரத்தநாளங்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

கழிவறையில் நீண்டநேரம் தொலைபேசி பயன்படுத்தும் போது உங்கள் தொலைபேசியில் 18 மடங்கு கிருமிகள் அதிகரித்து காணப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் டாய்லெட்டில் அமர்ந்தவாறே போனில் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டு இருப்பார்கள். இது போன்ற சமயத்தில், கிருமிகள நம் வாய் மற்றும் மூக்கு வழியாக உள் செல்ல வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

mobile

அதிக நேரம் அழுத்தம் கொடுத்து பத்து நிமிடத்திற்கு மேல் அமரும் போது, மலக்குடல் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது