தமிழகம் லைப் ஸ்டைல்

கல்லூரி விடுதியில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள்! நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் மாணவர்கள் கலக்கம்

Summary:

used condoms in boys hostel

சென்னை ஐஐடி மாணவர்கள் விடுதியில் காப்பாளர்கள் கடந்த வாரம் மாணவர்களின் அறைகளை சோதனை செய்தபோது குப்பைத் தொட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் சிக்கியுள்ளன.

சென்னை ஐஐடி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பிரம்மபுத்ரா ஆண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் மாணவர்கள் தங்களது அறையில் ஒரு சில பொருட்களை பயன்படுத்துவதற்கு நிர்வாகம் தடைவிதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி மாணவர்கள் ஒரு சிலர் பொருட்களை அறைகளில் தனியாக பயன்படுத்துவதாக விவாதத்திற்கு தகவல்கள் கிடைத்தன.

தொடர்ந்து விடுதி காப்பாளர்கள் கடந்த வாரம் மாணவர்களின் அனைத்து அறைகளிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் பல்வேறு தடை செய்யப்பட்ட பொருட்கள் மாணவர்களால் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அயர்ன் பாக்ஸ், வாட்டர் ஹீட்டர், மினி பிரிட்ஜ், வாட்டர் கூளர் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறிப்பாக விடுதியில் ஒரு அறையில் 20 சிகரெட் பாக்கெட்டுகள், தீப்பெட்டிகள், மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சோதனையில் தடையை மீறி பயன்படுத்தப்பட்ட பொருட்களையும், அதை பயன்படுத்திய மாணவர்களின் பெயர்களையும் அறிவிப்பு பலகையில் போடப்பட்டது. மேலும் பொருட்களுக்கு ஏற்றாற்போல் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பு பலகையில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலில் ஆணுறைகளும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஆணுறைகள் பயன்படுத்தும் மாணவர்களின் பெயர்களும் அப்படியே போடப்படப்பட்டுள்ளது. ஆணுறைகளைப் பயன்படுத்திய மாணவர்களுக்கு அதிகபட்சமாக 5,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. விடுதி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement