தமிழகம் லைப் ஸ்டைல்

சென்னையில் மிகவும் சுவையான பிரியாணி கிடைக்கும் ஆறு முக்கிய இடங்கள்!

Summary:

Top six biriyani centers in chennai

பிரியாணி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பொதுவாக அசைவ பிரியர்கள் அனைவர்க்கும் பிடித்த உணவுகளில் ஓன்று இந்த பிரியாணி. அந்த வரிசையில் நீங்களும் ஒரு பிரியாணி பிரியராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்குத்தான். அதுவம் நாளை விடுமுறை தினம் என்பதால் இது இன்னும் கூடுதல் சிறப்பாக அமையும். ஆம், சென்னையில் உள்ள மிக சிறந்த பிரியாணி வழங்கும் உணவகங்கள் பற்றித்தான் நாம் இங்கே பார்க்க உள்ளோம்.

1. யா மொஹைதீன் பிரியாணி
சென்னை பல்லாவரத்தில் இயங்கிவரும் யா மொகைதீன் பிரியாணி சென்னை உள்ள மிக சிறந்த பிரியாணி உணவகங்களில் ஓன்று. தற்போது சென்னையில் பல இடங்களில் தங்களது நிறுவனத்தின் கிளைகளை விரிவு படுத்தியுள்ளனர்.

2. ஆம்பூர் ஸ்டார் பிரியாணி
ஆம்பூர் பிரியாணி என்றாலே தனி சுவைத்தான். அதிலும் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி என்றால் கூடுதல் சுவைத்தான். இங்கு வழங்கப்படும் பிரியாணி மிகவும் சுவையுடனும் இருக்கும். கண்டிப்பா ஒருமுறையாவது நீங்க ட்ரை பண்ணலாம்.

3. சார்மினார் பிரியாணி
சென்னை ராயப்பேட்டையில் இயங்கிவரும் சார்மினார் பிரியாணி அந்த பகுதியில் மிகவும் சுவையான பிரியாணி உணவகத்தில் ஓன்று. இங்கு அமர்ந்து உணவருந்த வசதிகள் கிடையாது. இங்கு பிரியாணியுடன் வழங்கப்படும் கத்தரிக்காய் கூடும், ஆணியனும் மிகவும் சுவையாக இருக்கும். நின்றுகொண்டு சாப்பிட விரும்பாதவர்கள் வீட்டிற்கு பார்சல் வாங்கிச்சென்று சாப்பிடலாம்.

4. ஆசிப் பிரியாணி
சென்னையில் பல இடங்களில் இதன் கிளைகள் உள்ளது. பிரியாணி அருந்த ஆசை உள்ளவர்கள் ஒருமுறை இந்த உணவகத்தில் பிரியாணியை ருசிக்கலாம்.

5. திண்டுக்கல் தலப்பாக்கட்டி
நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒரு பிரியாணி உணவகம் என்றால் அது திண்டுக்கல் தலைப்பக்கட்டி பிரியாணி கடைதான். அந்த அளவிற்கு இந்த கடை பிரபலமானது.

6. சேலம் RR பிரியாணி
சென்னையின் பல இடங்களில் பறந்து விரிந்துள்ளது சேலம் RR பிரியாணி. அணைத்து விதமான பிரியாணி உணவுகளும் இங்கு கிடைக்கும். குறிப்பா மட்டன் பிரியாணி இங்கு மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இந்தக்கடையின் ஸ்பெஷல் என்னவென்றால் நீங்கள் வாங்கும் பிரியாணியின் அளவு மிகவும் கூடுதலாகவே இருக்கும்.


Advertisement