உங்களிடம் பொய் பேசுபவர்களை சட்டுன்னு கண்டுபிடிக்க சில டிப்ஸ்..



Tips to find the people lying to you

உண்மை என்னவென்றால் பெரும்பாலான மக்கள் பொய்கள் சொல்வதுண்டு. அவற்றில் சில பொய்கள், 'சிறிய வெள்ளைப் பொய்கள்' என்று கருதப்படுகிறது. இது வேறொருவரின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு இந்த சட்டை உன்னை குண்டாக காட்டவில்லை என்று கூறுவது. சில பொய்கள் தீவிரமான பொய்களாக இருக்கலாம் (நமது ரெஸ்யூமில் பயன்படுத்தியிருக்கும் விபரங்கள்). சில பொய்கள் கெட்டதாக கூட இருக்கலாம் (குற்றங்களை மறைப்பது).

Life style

ஒருவர் பொய் சொல்வதாலோ அல்லது உண்மையை மறைப்பதாலோ, எந்த எதிர்மறை விளைவுகளும் யாருக்கும் ஏற்படவில்லை என்றால் அதில் தவறில்லை. ஆனால் அது சிலருக்கு பாதகத்தை ஏற்படுத்துமே எனில் அது உகந்ததல்ல. நம்மிடம் ஒருவர் சொல்வது, உண்மையா பொய்யா என்று கண்டறிய சில வழிமுறைகள் உள்ளன.

பொய் சொல்பவர்களின் பதில்கள் சுருக்கமாக இருக்கக்கூடும் இன்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நிகழ்வைப் பற்றி விவரிக்கும் பொழுது நேரத்தையோ, நிகழ்ந்த இடத்தையோ, உடன் இருந்த நபர்களை பற்றிய விவரங்களையோ கூற மாட்டார்கள். இவைகள் 'சரிபார்க்கக் கூடிய விபரங்கள்' என்பதால் வேண்டுமென்றே தவிர்த்து விடுவார்கள்.

Life style

பொய் சொல்லும் போது ஒரு மனிதனின் உடல் மொழி அதனை வெளிப்படுத்தக் கூடும். தோள்களை அசைத்தல், சலிப்பான தோரணை, வெளிப்பாட்டின்மை, தங்களது முடியுடன் விளையாடுவது, உதடுகளை தங்கள் விரல்களை வைத்து அழுத்துவது போன்ற செயல்களை அவர்கள் செய்யக்கூடும்.

பொய்களை கூறும்போது குரலை உயர்த்துவார்கள். நடந்த நிகழ்வுகளை பின்னோக்கு வரிசையில் கூற சொன்னால், அவர்கள் எளிதில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது.