
Thinks should not hide with doctor in tamil
பொதுவாக வக்கீலிடமும் மருத்துவரிடமும் எதையும் மறைக்க கூடாது என்பார்கள். அதற்கு முக்கிய காரணம் நீங்கள் உண்மையை கூறினால் மட்டுமே அதற்கு ஏற்றாப்போல் முடிவுகளை அவர்களால் கூற முடியும் என்பதற்காகத்தான்.
இந்த பதிவில் மறந்தும்கூட மருத்துவரிடம் மறைக்காமல் கூறவேண்டிய ஒருசில விஷயங்களை பார்க்க உள்ளோம். அவை என்னவென்று பார்க்கலாம் வாங்க.
1 . வயது:
மருத்துவமனை சென்றதும் செவிலியர்கள் அல்லது மருத்துவர்கள் நம்மிடம் முதலில் கேட்பது பிறந்த தேதி அல்லது வயதுதான். சிலர் தங்களது உணமையான வயதை மற்றவர்களிடம் கூற விரும்பமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் மருத்துவரிடம் மறைக்காமல் உங்களது உண்மையான வயதை மட்டுமே கூற வேண்டும்.
2 . கெட்ட பழக்கங்கள்:
மருத்துவர் உங்களிடம் வேறு ஏதேனும் கெட்ட பழக்கம் இருக்கா என கேட்கும் பட்சத்தில் உங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களை மறைக்காமல் கூற வேண்டும். அப்போதுதான் சரியான தீர்வை அல்லது மருந்தினை மருத்துவரால் தர முடியும்.
3 . மருந்துகள்:
இதற்கு முன்னர் வேறு ஏதேனும் பிரச்சனை அல்லது வியாதிகளுக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறீர்களா என மருத்துவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அதைப்பற்றி மருத்துவரிடம் கட்டாயம் நீங்கள் தெரிவிக்கவேண்டும்.
4 . உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
நீங்கள் மருத்துவரை சந்திக்கும் முன் உங்கள் உடலில் வழக்கத்துக்கு மாறாக ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டாலோ அல்லது அறிகுறிகள் தெரிந்தாலோ அதை மருத்துவரிடம் கட்டாயம் தெரிவியுங்கள். குறிப்பாக உங்கள் பிறப்புறுப்பில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் அதை கட்டாயம் மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும்.
Advertisement
Advertisement