அடிப்படை வசதியே செய்யவில்லை, தேர்தல் வேண்டுமா? - தள்ளுமுள்ளு வன்முறையினதால் தீக்கிரையான வாக்குச்சாவடி.!Karnataka chamrajnagar election booth Attacked 


இந்திய மக்களவை தேர்தல்கள் 2024 தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று நிறைவு பெற்றது. இன்று ஏப்ரல் 26, 2024 அன்று கர்நாடகா மாநிலத்தில் 14 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

இந்த தேர்தலில் பலரும் காலை முதலாக வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் வந்து தங்களின் வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், அங்குள்ள தெக்கனே மென்டரே, துளசிகரே, படசலனம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களில் ஒருதரப்பு திடீர் போராட்டம் செய்தது. 

தங்களின் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி ஒருதரப்பு போராட்டம் செய்தது. மற்றொரு தரப்பு தேர்தலில் வாக்களிக்க நின்றுள்ளது. 

அச்சமயம் இருதரப்பு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டம் நடக்க, தேர்தல் வாக்குச்சாவடி மையம் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. கலவர சூழல் உண்டானதும் அங்கு வாக்குப்பதிவுகள் நிறுத்தப்பட்டது. தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டோருக்கு வலைவீசப்பட்டுள்ளது.