போட்டுத்தாக்கும் வெயில்., தொழிலாளர்களுக்காக அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!

போட்டுத்தாக்கும் வெயில்., தொழிலாளர்களுக்காக அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!



TN Health Ministry Advice to Industries 

 

தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரத்திற்கு முன் கொளுத்தும் வெயில் காரணமாக, மக்கள் வெயில் சார்ந்த பல்வேறு உடல்நலக்குறைவை எதிர்கொண்டு வருகின்றனர். 

அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தலை அரசு வெளியிட்டுள்ளது. மேலும், வெயில் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி இருக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் இயற்கையான பொருட்கள், காய்கறிகள், பழங்களை சாப்பிடவும் அறிவுரை வழங்கியுள்ளது.

இந்நிலையில், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்களின் நலன்கருதி, தமிழ்நாடு சுகாதாரத்துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அந்த அறிவிப்பில், "வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், காலையில் விரைவில் வேலையை தொடங்கி, மதியம் ஊழியர்களுக்கு இடைவெளி வழங்க வேண்டும். 

வெப்பம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவோரை சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். கழிவறைகள் சுத்தமாக பராமரித்திருக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளது.