லைப் ஸ்டைல்

காலை எழுந்ததும் இவற்றை பார்த்தால் வீட்டில் செல்வம் சேரும்! செல்வம் நிலைத்திருக்குமாம்.

Summary:

Things should watch after wake up morning

பணம் சம்பாதிக்க வேண்டும், செல்வம் சேரவேண்டும், நிம்மதியான வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகத்தான் தினம் தினம் மனிதன் உழைக்கின்றான். சிலர் என்னதான் கடினமாக உழைத்தாலும் சம்பாதிப்பதை விட செலவுகள் அதிகமாகிக்கொண்டே இருக்கும்.

அப்படிப்பட்டவர்கள் காலையில் தூங்கி எழுந்ததும் இவற்றை பார்த்தால் செல்வம் சேரும், நிலைத்திருக்கும் என்கிறது சாஸ்த்திரம். அதன்படி காலை தூங்கி எழுந்ததும் கோவில் கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள் இவற்றை பார்த்து வந்தால் செல்வம் சேரும்.

மேலும் மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு உள்ளங்கை, மனைவி மற்றும் குழந்தைகள் இவற்றை பார்ப்பதன் மூலம் செல்வம் பெருகி வீட்டில் அமைதி நிலைத்திருக்கும் என்கிறது வேத சாஸ்திரம். அதன்படி இந்தனை முயற்சி செய்து பாருங்கள்.


Advertisement