திருஷ்டி நீங்கனுமா? இந்த மந்திரங்களை சொல்லி திருஷ்டி விலக்கும் சக்திவாய்ந்த பரிகார முறைகள்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க...



tamil-drusti-pariharam-mantras-and-methods

பழமையான தமிழக பாரம்பரியத்தில், திருஷ்டி தாக்கம் என்பது நம்பிக்கையுடன் தொடர்புடைய ஒன்று. அத்தகைய திருஷ்டியால் ஏற்படும் தீய சக்திகளை நீக்க பல வழிகளும் மந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

திருஷ்டி கழிக்கும் மந்திரம் – பொதுவான பயன்பாடு

திருஷ்டி அடைந்தவர்களை கிழக்கு பார்த்து உட்கார வைத்து, உப்பு, வரமிளகாய், கடுகு ஆகியவற்றைக் கொண்டு தலையை இடதுபுறமாக மூன்று முறையும், வலதுபுறமாக மூன்று முறையும் சுற்றவேண்டும். இதன் போது கீழ்கண்ட மந்திரத்தை கூற வேண்டும்:

"பாம்பு கண்ணு, பல்லி கண்ணு பல்லியோட போ
பேய் கண்ணு பிசாசு கண்ணு பேயோட போ
பிச்சை கண்ணு திரிச்ச கண்ணு தீயோட போ"

இதையும் படிங்க: சனிபகவான் பாதிப்பில் இருந்து விடுபட.. ஆடிமாத சனியில் இதை செய்தால் போதும்.!

மூன்று முறை மந்திரம் கூறியபின், திருஷ்டி கழித்த பொருட்களை தீயில் போடுவது அவசியம். இது நீண்டகாலமாக நம்பப்பட்டு வரும் முறையாகும்.

எலுமிச்சை மூலம் திருஷ்டி கழிக்கும் முறை

மற்றொரு பரவலான முறையாக எலுமிச்சைப்பழம் கொண்டு திருஷ்டி கழிப்பதும் வழக்கமானது. இதற்கான மந்திரம்:

"மஞ்சள் வர்ண புளித்த மாரி!
ரத்த வீர ராசா கன்னி,
மனம் கொண்ட பூமி நிஷ்ட மாரி வா! வா!"

இந்த மந்திரத்தை கூறியபின் எலுமிச்சையை சுற்றி, பின்னர் அதையும் தீயில் போட வேண்டும். இது தீய சக்திகளை தடுக்க உதவுகிறது என நம்பப்படுகிறது.

இவை எல்லாம் நம் பழங்கால மூதாதையர்கள் பின்பற்றிய சாகடைகளைப் போன்று, மன நிம்மதிக்கும், நம்பிக்கைக்கும் வழிவகுக்கும் பாரம்பரிய வழிமுறைகளாகும்.

 

இதையும் படிங்க: வாழ்கையில் கடன் பிரச்சனையால் அவதி படுகிறீர்களா? இந்த பரிகாரம் செய்தால் நிச்சயம் தீர்வு உண்டு!