18 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியன்-கேதுவால் வரும் தரித்திர யோகம்! ஆபத்தில் இருக்கும் மூன்று ராசிக்காரர்கள்? முழு தகவல் இதோ..



surya-ketu-daridra-yogam-august-2025

ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுகிறார். இந்த பெயர்ச்சி, அனைத்து ராசிகளுக்கும் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சூரியன் பெயர்ச்சி – சிம்ம ராசிக்கு செல்லும்

தற்போது சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார். வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்தில், அவர் தன்னுடைய சொந்த ராசியான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சூரியனின் சொந்த ராசிக்கு செல்லுவது சாதகமானதாகக் கருதப்பட்டாலும், அங்கே ஏற்கனவே கேது என்பவர் பயணித்து வருகிறார்.

தரித்திர யோகம் உருவாகும் சிம்மத்தில்

சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை சிம்ம ராசியில் நிகழ்கின்றது. இது, 18 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் ஒரு முக்கியமான யோகம். இதனால் 'தரித்திர யோகம்' ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது சில ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவுகளை கொடுக்கக்கூடும்.

இதையும் படிங்க: ஜூன் முதல் ஆகஸ்ட் வரை குரு நட்சத்திர பெயர்ச்சி! மூன்று ராசியினருக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்ட நன்மைகள்! முழு விபரம் உள்ளே...

பாதிக்கப்படும் முக்கியமான ராசிகள்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு 5-ஆம் வீட்டில் இந்த சேர்க்கை ஏற்படுகிறது. இதனால், இதய சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கேதுவின் மந்திரங்களை ஜபிப்பது சிறந்தது.

ரிஷபம்

ரிஷப ராசியில் 4-ஆம் வீட்டில் இந்த யோகம் நிகழ்கிறது. தாயாரின் ஆரோக்கியம் குறைந்து, குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி நிலை பாதிக்கப்படும்.

சிம்மம்

சொந்த ராசியில் தான் இந்த யோகம் ஏற்படுவதால், சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடல் நலத்திலும், தொழிலிலும் சிக்கல்கள் வரக்கூடும். கேதுவின் மந்திரங்களை தினமும் கூறுவது நல்லது.

கவனிக்க வேண்டியவை

மேலே கூறப்பட்ட அனைத்து தகவல்களும் நம்பிக்கைகள் மற்றும் ஜோதிடக் கணிப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்டவை. வாசகர்கள் தங்களது நம்பிக்கையை பொருத்து இதைப் பார்க்கலாம். எங்கள் நோக்கம், தகவலை வழங்குவது மட்டுமே.

 

இதையும் படிங்க: ஆடி மாத சிவராத்திரியில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கஜகேசரி யோகம் ! ஜூலை 23 அன்று அதிஷ்டம் பெரும் மூன்று ராசியினர்கள்!