உலகம் லைப் ஸ்டைல்

நடு வானில் விமானம் மீது மின்னல் தாக்கினால் என்ன ஆகும்..? கேமிராவில் சிக்கிய திகில் வீடியோ.!

Summary:

Storm attacked flying flight video goes viral

மிகவும் ஆபத்தான பயன்களில் ஓன்று விமான பயணம். கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல, சின்ன அசம்பாவிதம் என்றால் கூட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் இருந்து புறப்பட பயணிகள் விமானம் ஓன்று, நடு வானில் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தை திடீரென மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சியரா புயல் ஐரோப்பாவை உலுக்கி வரும் நிலையில் பிரித்தானியா நகரமான பர்மிங்காம் விமான நிலையத்தில் இருந்து டப்ளினுக்கு புறப்பட்ட ஏர் லிங்கஸ் விமானம், நடு வானில் சென்றுகொண்டிருந்தபோது மின்னல் தாக்குதலில் சிக்கியுள்ளது.

விமானம் மீது மின்னல் தாக்கும் காட்சி குடியிருப்பு பகுதிகளில் பொறுத்தப்பட்டிருட்ணஹா CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. மின்னல் தாக்கியதும், விமானம் என்ன ஆனது? பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இதற்கு பதிலளித்துள்ள விமான நிறுவனம், பொதுவாக இடி, மின்னல் போன்றவற்றை தாங்கும் வகையில்தான் விமானங்கள் வடிவமைக்கப்படும். அதனால், விமானம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement