லைப் ஸ்டைல்

துப்பாக்கியை விழுங்கிய பாம்பு! புகைப்படத்தை பார்த்து குழப்பத்தில் நெட்டிசன்கள்!

Summary:

snake eate gun

பொதுவாக ஒவ்வொரு விலங்கினங்களும் விசித்திரமான செயல்களை செய்வது வழக்கம். அன்றாட வாழ்வில் மனிதர்களே செய்ய கூடாத விஷயங்களைச்செய்து மாட்டிக்கொள்கின்றனர். ஆறறிவு உள்ள மனிதர்களே இவ்வாறு செய்யும்போது ஐந்தறிவு ஜீவன்களுக்கு சொல்லவா வேண்டும். 

சமீபத்தில் ஆடு, மாடு, நாய் போன்ற உயிரினங்கள் தண்ணீர் குடிக்கும்போது குடத்திற்குள் தலையை விட்டு தண்ணீர் குடித்துவிட்டு பிறகு தலையை வெளியே எடுக்க முடியாமல் மாட்டிக்கொண்டு திண்டாடும் வீடியோவை இணையத்தில் பார்த்திருப்போம். 

அதேபோல் பாம்பு ஒன்றின் வயிற்றில் துப்பாக்கியின் அச்சு, காணப்படுவதால் துப்பாக்கியை விழுங்கி விட்டதாக பாம்பு ஒன்றின் படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இது உண்மையா என்ற கேள்வியினை பலரும் கேட்டு வருகின்றனர். நம்பமுடியாத இந்த புகைப்படத்தினை பலரும் ஆச்சரியமாக பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement