மருத்துவம் லைப் ஸ்டைல்

நீங்கள் மது அருந்துபவர்களா? உங்களுக்கு ஏற்படும் பிரச்னை என்ன தெரியுமா?

Summary:

Risk of alcohol abuse

தற்போதைய வாழ்க்கை முறையில் எதற்கு எடுத்தாலும் பார்ட்டி, அதிலும் பார்ட்டியில் மது அருந்துவதையே பலர் வழக்கமாக வைத்துள்ளனர். மது அருந்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல எண்ணிக்கையிலான நோய்கள் ஏற்படுகின்றன.

பார்ட்டியின்போது  சிலர்  எவ்வளவு அருந்துகிறோம் என்பதே தெரியாமல் அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். இதனால் உடலுக்கு ஆபத்து ஏற்படுவது நிச்சயமாகும். மதுவை தினமும் அளவு மீறி அருந்துவதால் விரைவில் உயிரிழப்பது நிச்சயமாகும். எனவே எப்போது மது அருந்தினாலும் அதில் கட்டுப்பாடான அளவு அவசியம் ஆகும்.

அதிகப்படியான மது அருந்துவதால், கல்லீரல் பாதிப்பு, கணையம் பாதிப்பு ஏற்பட்டு விரைவில் உயிரிழக்க நேரிடும். தற்போதய வாழ்கை முறையில் எந்தவித தீய பழக்கமும் இல்லாதவர்களுக்கு கூட பல நோய்கள் ஏற்படுகின்றன. மது பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தை விட்டுவிடுங்கள். ஏனென்றால் மதுப்பழக்கத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மது அருந்துவதால், தூக்கமின்மை, வாந்தி, வயிற்றுப்புண், காச நோய் உயர் ரத்த அழுத்தம், இருதய வீக்கம், மலட்டுத்தன்மை, நரம்பு மண்டல சோர்வு, கல்லீரல் பாதிப்பு, மாரடைப்பு, திடீர் மரணம், தற்கொலைக்கு துாண்டுதல் போன்ற விளைவுகள் ஏற்படும் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். எனவே மதுப்பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தை விட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு அடுத்த தலைமுறையே இல்லாமல் போய்விடும்.


Advertisement