ஆண்களை விட பெண்கள் அதிக காலம் உயிர் வாழ என்ன காரணம் தெரியுமா? ஆராய்ச்சி முடிவுகள்!

ஆண்களை விட பெண்கள் அதிக காலம் உயிர் வாழ என்ன காரணம் தெரியுமா? ஆராய்ச்சி முடிவுகள்!



reason-for-ladies-living-longer-than-men-in-tamil

ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்கள் என்பது பொதுவாக நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆண்களை விட பெண்கள் மட்டும் ஏன் அதிக வருடம் உயிர் வாழ்கிறார்கள்? இது குறித்த ஆராய்ச்சி செய்த வல்லுனர்கள் அதற்கான காரணங்களை வெளியிட்டுள்ளனர். 


பொதுவாகவே பெண்களை விட ஆண்களுக்கு பல்வேறு தீய பழக்கங்கள் உள்ளன.  புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற பல்வேறு காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஆண்களைவிட பெண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் எனும் பாலின ஹார்மோன் செயல்பாடு தான் ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் உயிர்வாழ காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஆண்களை விட பெண்கள் அதிக வருடம் உயிர்வாழ மிக முக்கிய காரணிகளாக இரண்டு விஷயங்களை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.Tamil Health Tips

முதலாவது, பெண்களுக்கு சுரக்கும் பாலின ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன்  உடலில் இருக்கும் அணுக்கள் இறப்பதை குறைக்கிறது. இதனால் அணுக்கள் இறப்பது குறைக்கப்பட்டு பெண்களால் அதிக காலம் உயிர் வாழ முடிகிறது.

இரண்டாவதாக பெண்களின் டிஎன்ஏவில் நுனியில் இருக்கும் Telomere ஆண்களை விட பெண்களுக்கு மிக நீளமாக இருக்கும். Telomere நீளமாக இருப்பது பெண்கள் அதிக காலம்  உயிர் வாழ்வதற்கு வழி வகுக்கிறது. இதுவே பெண்கள் ஆண்களைவிட அதிக காலம் உயிர் வாழ்வதற்கு மிக முக்கிய காரணங்களாகும்.