சினிமாவில் காட்டுவது போல் ஒரு முறை உடலுறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?



possibilities-for-getting-pregnancy-at-first-time-relat

ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? என்றால் முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  முதல் உறவிலேயே கர்ப்பம் தரிப்பது என்பது சாதாரண நிகழ்வுதான் என்கிறது மருத்துவம்.

ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும் போது,  சில வாரம் கழித்து அவருக்கு மாத விடாய் வருகிறது. எனவே அப்பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார்.

Tips for pregnancy

முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ பல முறை கடந்த பின்பே  கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே உண்மை. 

Tips for pregnancy


85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.