அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்; அசத்தல் தகவல் இதோ.!Pineapple Benefits Tamil 

 

தினமும் ஏதோ ஒரு வேலைக்காக தொடர்ந்து ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் நாம், நமது உடலை பராமரிக்க வேண்டிய அவசியம் தற்போதைய காலத்தில் அதிகம் ஏற்பட்டுள்ளது. 

நமது உடலின் வளர்ச்சியை அதிகரிக்கவும், உடல் நலத்தை மேம்படுத்தவும் பழங்கள் அத்தியாவசியமாகிறது. அந்தவகையில், சீசன் நேரங்களில் கிடைக்கும் அன்னாசிப்பழத்தை (Pine Apple) சாப்பிடுவது புற்றுநோயை எதிர்த்து போராட உதவும். 

அன்னாசிபழத்தில் புற்றுநோயை எதிர்க்கும் ரசாயன பொருளானது உள்ளது. மேலும், எலும்புகள் சார்ந்த பிரச்சனைகள் விரைந்து சரியாகும். செரிமானக்குறைவு, குடலில் ஏற்பட்டுள்ள தொந்தரவு போன்றவையும் தடுக்கப்படும். 

பின்குறிப்பு: அன்னாசி பழத்தை குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பழத்தை அதிகளவு சாப்பிடும் பட்சத்தில் வாய்ப்புண், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவையும் ஏற்படலாம். அதேபோல, அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்க்கலாம்.