
ஊட்டச்சத்துக்களை வாரிக்கொடுக்கும் வேர்கடலை பொடி..!
வேர்கடலையை வைத்து எவ்வாறு பொடி செய்வது என்பதனை குறித்ததுதான் இந்த செய்திக்குறிப்பு.
வேர்கடலையில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. அத்துடன் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்கும், உடலில் கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களை மேம்படுத்துவதற்கும் வேர்க்கடலை மிகவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை - 2 கொத்து
பூண்டு பல் - 10
உப்பு - தேவைக்கேற்ப
வரமிளகாய் - 20
வேர்க்கடலை - ஒரு கப்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை கப்
செய்முறை :
★முதலில் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை போட்டு வதக்க வேண்டும். கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
★கடலைப் பருப்பும், வேர்க்கடலையும் பொன்னிறமாக வரும்வரை வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். பின் ஒரு தட்டில் இவை அனைத்தையும் கொட்டி நன்றாக ஆற வைக்க வேண்டும்.
★ அடுத்து மிக்ஸியில் சேர்த்து அத்துடன் பூண்டு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
★இவ்வாறு செய்தால் சுவையான, சத்தான, சூப்பரான, காரசாரமான வேர்க்கடலை பொடி நொடிப்பொழுதில் தயாராகிவிடும்.
Advertisement
Advertisement