#கிட்ஸ் பேவரைட்: 5 நிமிடங்களில் சுவையான பன்னீர் பஜ்ஜி செய்வது எப்படி?.! மாலை நேர அருமையான ஸ்நாக்ஸ்..! 

#கிட்ஸ் பேவரைட்: 5 நிமிடங்களில் சுவையான பன்னீர் பஜ்ஜி செய்வது எப்படி?.! மாலை நேர அருமையான ஸ்நாக்ஸ்..! 



paneer bajji for kids

குழந்தைகளுக்கு பிடித்த பன்னீர் பஜ்ஜி எப்படி செய்வது என்பது பற்றியது தான் இந்த செய்திக்குறிப்பு.

தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 1 கப் 
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
பன்னீர் - 200 கிராம் 
அரிசி மாவு - 2 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - தேவைக்கேற்ப 
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி

செய்முறை :

★முதலில் பன்னீரை வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

★பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, இஞ்சி, பேக்கிங் சோடா, கடலை மாவு, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

★அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீர் துண்டுகளை கடலை மாவு கலவையில் நனைத்து பொறிக்க வேண்டும்.

★இப்போது சுவையான பன்னீர் பஜ்ஜி நிமிடங்களில் தயாராகிவிடும்.