நாம் வேண்டாம் என தூக்கி வீசும் ஆரஞ்சு பழ தோலில் சுவையான, சூப்பரான டீ போடுவது எப்படி...
நாம் சாப்பிட்டு விட்டு வேண்டாம் என தூக்கி வீசும் ஆரஞ்சு பழ தோலில் சுவையான சூப்பரான டீ போடுவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு பழ தோல் -1/2
தண்ணீர் - 1 1/2 கப்
இலவங்கப்பட்டை - 1/2
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 2
வெல்லம் - 1/2 டேபிள் ஸ்பூன்
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைக்கவும். பின் அதில் தண்ணீர், ஆரஞ்சு தோல், இலவங்கப்பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட்டு டீயை வடிகட்டி வெல்லம் சேர்த்து பருகினால் சுவையான, சூப்பரான ஆரஞ்சு பழ தோல் டீ தயார்.