#பண்டிகை: ஓணம் ஸ்பெஷல் நெய்யப்பம் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி....

#பண்டிகை: ஓணம் ஸ்பெஷல் நெய்யப்பம் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி....


Onam special naiappam recipe

நாளை நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டப்பட உள்ளது. இந்நிலையில் ஓணம் ஸ்பெஷல் நெய்யப்பம் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கப்
பொடித்த வெல்லம் - 3/4 கப் 
தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

பச்சரிசியை குறைந்தது 2 மணி நேரம் ஊறவிட்டு பின் நன்கு கழுவி அதனுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும். பின்னர் அரைத்து விழுதுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் பணியாரக்கல்லை வைத்து சூடானதும் அதில் நெய் தாராளமாக விட்டு அதில் வெல்லமாவை ஊற்றி நன்கு வேக விடவும். ஒருபுறத்தில் நன்கு வெந்தவுடன் கம்பியால் குத்தி அடுத்த பக்கமாக நெய் அப்பத்தை திருப்பி போட்டு வேக விடவும். அவ்வளவு தான் சுவையான நெய்யப்பம் தயார்.