மேலாடை அணியாத பெண்கள்..! கட்டாயம் இரண்டு திருமணம் செய்யும் ஆண்கள்..! இந்தியாவில் நடைபெறும் நம்ப முடியாத விசித்திரமான உண்மை சம்பவங்கள்..!
மேலாடை அணியாத பெண்கள்..! கட்டாயம் இரண்டு திருமணம் செய்யும் ஆண்கள்..! இந்தியாவில் நடைபெறும் நம்ப முடியாத விசித்திரமான உண்மை சம்பவங்கள்..!

இந்த உலகம் மிகவும் வினோதமானது. அனைத்து இடங்களிலும் பல்வேறு விதிமுறைகள், பல்வேறு கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில், உலகில் கடைபிடிக்கப்படும் இரண்டு வினோத சம்பவங்கள் குறித்து இங்கு பார்க்கலாம் வாங்க.
1 . முதல் மனைவிக்கு குழந்தையே பிறக்காது:
நம் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில், பார்பர் மாவட்டத்தில் உள்ள தேரசர் என்ற கிராமத்தில் சுமார் 600 பேர்வரை குடியிருந்து வருகின்றனர். பலவருடங்களாக இங்கு வாழும் இவர்களுக்கு ஒரு வினோத பழக்கம் உள்ளது. அதாவது இங்கு உள்ள ஆண்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொள்ளவேண்டும்.
இது அந்த பகுதியில் பின்பற்றப்படும் மாதகாலச்சாரம் இல்லை. இவர்கள் கூறும் கருத்துப்படி, முதல் மனைவிக்கு குழந்தையே பிறக்காதாம். எனவே இரண்டாவததாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அந்த பெண் மூலம்தான் குழந்தை பெறுவார்களாம்.
பெரும்பாலான ஆண்கள் முதல் மனைவியுடன் குழந்தை பெற முயற்சித்தும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறுகின்றனர்.
2 . மேலாடையே போடாத பெண்கள்:
இந்த உலகின் பல்வேறு பகுதிகளில் பலவிதமான பழங்குடியின மக்கள் வாழ்த்து வருகின்றனர். அவர்களில் ஒரு வகைதான் போண்டா பழங்குடியின மக்கள். இவர்கள் இந்தியாவில் ஓடிசா மாநிலம் மால்கன்கிரி என்ற மாவட்டத்தில் வாழ்த்து வருகின்றனர். பெரும்பாலும் காடுகளிலையே இருக்கும் இவர்கள் நகர் புரங்களுக்கு வருவதே இல்லை.
இவர்கள் கீழ்போண்டா, மேல் போண்டா என இரண்டு வகைகளாகபிரிக்கப்படுகின்றனர். போண்டா என்பது அவர்கள் பேசும் மொழி. இந்த மொழியிலையே அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இந்த இனத்தில் இருக்கும் ஆண்கள் 10 - 12 வயதுக்குள்ளையே திருமணம் செய்துகொள்கிறார்களாம். இந்த இனத்தில் ஆண்களை விட பெண்களின் ஆதிக்கம்தான் அதிகமாம். மேலும், பெண்கள் தங்களை விட 5-10 வயது குறைவான வயது ஆண்களை தான் திருமணம் செய்து கொள்கிறார்களாம்.
இந்த இனத்தில் இருக்கும் பெண்கள் மேலாடை அணிவதே கிடையாதாம். அதற்கு பின்னால் ராமாயணக்கதை வேறு இருக்கிறது. ராமன் சீதையுடன் வனவாசம் செல்லும்போது, சீதை ஒரு குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும்போது போண்டா இனத்தை சேர்ந்த சில பெண்கள் சீதை நிர்வாணமாக குளிப்பதை பார்த்துவிடுகிறார்களாம்.
இதனால் கோபமடைந்த சீதை இனி உங்கள் இனத்து பெண்கள் வாழ் நாள் முழுவதும் நிர்வாணமாகவும், குறைந்த முடியுடன் தான் வாழ வேண்டும் என சாபமிடுகிறாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் சீதையிடம் மன்னிப்பு கேட்க, தனது சேலையில் இருந்து சில பகுதியை கொடுத்து இந்த அளவிற்குத்தான் இனி நீங்கள் துணி உடுத்தவேண்டும் என தனது சாபத்தை குறைத்துக்கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது.