இறந்துபோன தனது மகளை 4 வருடம் கழித்து மீண்டும் சந்தித்த தாய்..! கட்டி அணைக்க நடந்த பாச போராட்டம்..! வைரல் வீடியோ.! - TamilSpark
TamilSpark Logo
உலகம் லைப் ஸ்டைல் டெக்னாலஜி

இறந்துபோன தனது மகளை 4 வருடம் கழித்து மீண்டும் சந்தித்த தாய்..! கட்டி அணைக்க நடந்த பாச போராட்டம்..! வைரல் வீடியோ.!

நமக்கு மிகவும் நெருக்கனமானவர்கள், பிடித்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். அதுபோன்ற ஒரு வாய்ப்புதான் வி.ஆர் என்ற தொழில்நுட்பம் மூலம் இந்த தாய்க்கு நிஜமாகியுள்ளது.

ஆம், கண்டறியப்படாத நோய் ஒன்றினால் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மகள் நயோன் இறந்துவிட, அவரது நினைவாகவே இருந்த அவரது தாய்க்கு மீண்டும் நயோனுடன் பேசி மகிழ வி.ஆர் என்ற தொழில்நுட்பம் மூலம் உதவி செய்துள்ளது தென்கொரியாவை சேர்ந்த தொழில்நுட்ப குழு.

இதற்காக நயோனின் உண்மையான உருவத்தை அப்படியே தயார் செய்து வி.ஆர் தொழில்நுட்பம் மூலம் அவரது தாய்யை தனது மகளுடன் பேச வைத்துள்ளனர். இந்த பாச சந்திப்பை ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது தென்கொரியாவைச் சேர்ந்த ”Meeting You" திரைக்குழு.

கண் முன்னே தனது மகள் தெரிந்தும், அவரை தொட முடியாமல், கட்டி அணைக்க முடியாமல் பாச போராட்டம் நடத்தும் அந்த தாயின் வலிகள் பார்போரையும் கண்கலங்க வைக்கின்றது. இதோ அந்த வீடியோ.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo