அடுத்த சீன் இதுதானா? டாக்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிறக்கடிக்க ஆசை மீனா!
உங்களது மிக்ஸி அழுக்காக உள்ளதா?.. பளபளவென ஜொலிக்க வைக்க சிம்பிள் டிப்ஸ் இதோ..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

நம்மால் அந்தப்பொருள் இல்லாமல் எந்த வேலையும் பார்க்க இயலாது என்று நம்மிடம் அதிகளவில் பழகிப்போன பொருட்களில் ஒன்று மிக்ஸி. இதனை ஒரு நாளைக்கு 2 முறையாவது குறைந்தது உபயோகம் செய்வோம். மிக்சி இல்லையேல் சமையலே இல்லை என்றும் சிலர் இருக்கின்றனர்.
மிக்ஸியை எப்படி சுத்தம் செய்வது என இனி காணலாம். நாம் முகத்துக்கு உபயோகிக்கும் ஒரு பேஸ்வாஸை எடுத்து அதனை மிக்ஸியில் தேய்த்து, பழைய டூத் பிரஸ் கொண்டு மிக்சியின் பாகங்களை தேய்த்து டிஷ்யூ பேப்பரை வைத்து துடைத்தெடுத்தால் மிக்ஸியில் இருக்கும் அழுக்குகள் வந்துவிடும்.
மேலும், பேஸ்ட் இருந்தால் அதனுடன் காய்ந்த முட்டை ஓடு, பேக்கிங் சோடா, வினிகர் போன்றவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து, ஜாரை இயக்கினால் அதிலிருக்கும் அழுக்குகள், மூடியில் இருக்கும் அழுக்குகள் போன்றவை வெளியேறும்.
இது இல்லாமல் பச்சரிசி, புழுங்கல் அரிசி என ஏதேனும் ஒரு அரிசியை பேக்கிங் சோடாவிடன் சேர்த்து மிக்ஸியை சுத்தம் செய்யலாம். நம்மிடம் இருக்கும் மாத்திரை அட்டையில் சில்வர் போன்று இருக்கும் அட்டையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஜாரில் போட்டு இரண்டு சுழற்றினால் ஜார் ஷார்ப்பாக மாறிவிடும்.