மணமேடையில் வித்தியாசமான பரிசு கொடுத்த நண்பர்கள்.! அப்படி என்ன பரிசு தெரியுமா?



marriage-gift-viral-video

பொதுவாக திருமணம் என்றாலே திருமண வரவேற்பின் போது மணமக்களுக்கு அன்பளிப்பு வழங்குவது வழக்கமான ஓன்று. சிலர் பணமாக கொடுப்பார்கள், சிலர் பொருட்களாக கொடுப்பார்கள். இன்னும் சிலர் வெங்கயம், தக்காளி போன்று சீசனுக்கு ஏத்தவாறு பரிசுகளை கொடுத்து இணையத்தில் வைரலாகிவிடுவார்கள்.

அந்தவகையில், திருமண ஜோடி ஒன்றுக்கு அவர்களது நண்பர்கள் மிகவும் வித்தியாசமாக பரிசு ஒன்றை வழங்க, தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. அப்படி என்ன பரிசு என கேட்குறீர்களா? பெரிய பார்சல் ஒன்றை மாப்பிளையின் நண்பர்கள் மனமக்களிடம் கொடுத்து அதை பிரித்து பார்க்க சொல்கிறார்கள்.

ஆகா, ஏதோ பெரிய பரிசுப்போல என நினைத்து மாப்பிள்ளையும் அந்த பார்சலை பிரித்து பார்க்க, கடைசியில் வடிவேலு டவுசர் பாக்கெட்டில் கைவிட்டு ஒன்னும் இல்லையே என்று எடுத்துக்காட்டும் நகைச்சுவையான புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.