கண்பார்வை திறனை அதிகரிக்கும் பச்சை தக்காளி.? வேறு என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.!?

கண்பார்வை திறனை அதிகரிக்கும் பச்சை தக்காளி.? வேறு என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.!?



Many disease cured by eating green tomato

பொதுவாக நாம் வீடுகளில் சமைக்கும் சமையலில் தக்காளி பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் அரிது. அந்த அளவிற்கு நாம் சமையலுக்கு தேவையான மிகவும் முக்கியமான காய்கறிகளில் ஒன்றாகிவிட்டது தக்காளி. இந்த தக்காளி சுவைக்கு மட்டுமல்லாது, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளி என்றாலே சிவப்பு நிற தக்காளி தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.

Green tomato

ஆனால் தக்காளியில் பச்சை நிற தக்காளி என்ற ஒரு வகை உள்ளது. இது சிவப்பு நிற தக்காளியைப் போலவே புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுடையது. ஆனால் இதில் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் நலன்கள் அதிகமாக உள்ளது என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்த பச்சை நிற தக்காளியில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

1. கால்சியம் சத்து நிறைந்துள்ள பச்சை நிற தக்காளி அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளும் போது எலும்புகளில் உள்ள மஜ்ஜை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் மூட்டு வலி, கால் வலி, முதுகு வலி போன்ற வலிகள் குணமடைய உதவுகிறது.
2. தக்காளியில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளதால் இது கண் பார்வை திறனை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த வெள்ளை அணுக்களை உருவாக்குவதால் பச்சை நிற தக்காளியை உண்பதன் மூலம் கண் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமடைகிறது.
3. பச்சை நிற தக்காளியில் அதிகமான பொட்டாசியமும், குறைவான சோடியமும் இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளும்போது உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. இதன்மூலம் மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
4. பச்சை நிற தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துவதோடு, முதுமையில் இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது.

Green tomato

5.ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் நிறைந்துள்ள பச்சை நிற தக்காளி சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும், சருமம் சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்தும் மருத்துவ பண்புகள் கொண்டதாகவும் உள்ளது.

6. காயம் ஏற்பட்டு அதிகமாக ரத்தப்போக்கு மற்றும் ரத்தம் உறையாமல் அதிகமாக செல்வது போன்ற பிரச்சினைகளுக்கு பச்சை நிற தக்காளி சாப்பிடுவது நல்ல பலனை தரும்.