லைப் ஸ்டைல் காதல் – உறவுகள்

14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து கொலை செய்த வாலிபர்; பரபரப்பு வாக்குமூலம்!

Summary:

man killed 14 year old girl in selam

சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படித்துவந்த ராஜலட்சுமி என்ற 14 வயது சிறுமியை திருமணமாகி இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த கார்த்திக் என்பவர் சிறுமியை வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து கொலை செய்த கார்த்திக்கை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்களை கார்த்திக் பகிர்ந்துள்ளார்.

தனக்கு மகள் வயதுடைய எட்டாம் வகுப்பு படித்து வந்த ராஜலட்சுமி பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் பின் தொடர்ந்துள்ளார் கார்த்திக். ஒருதலையாக ராஜலட்சுமியை காதலித்த அவர் ராஜலட்சுமியை  பலமுறை தொந்தரவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் திடீரென ஒரு நாள் கார்த்திக் ராஜலட்சுமியின் தலையை வெட்டி கொலை செய்தார்.

selam 14 years child murder for one side love

இதுகுறித்து கைது செய்யப்பட்ட கார்த்திக் போலீசாரிடம், "நான் சிறுமி ராஜலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்தேன, அவர் பள்ளிக்கு சென்று வரும்போதெல்லாம் அவரை பின்தொடர்ந்து செல்வேன். ஆனால் ராஜலட்சுமிக்கு என்னை பிடிக்கவில்லை, மேலும் இது குறித்து  தனது தந்தையிடம் தெரிவித்து விடுவேன் என மிரட்டியதால் அவரை கொலை செய்தேன்" என கூறியுள்ளார்.

மேலும் அவர் "என்னை ரெயில் தண்டவாளத்தில் படுக்க வைத்து கொன்று விடுங்கள். தன்னை வெளியில் விட்டால், இதுபோல் வேறு யாரையாவது கொலை செய்து விடுவேன். எனவே என்னை உயிருடன் விட்டு விடாதீர்கள் என்று போலீசாரிடம் கெஞ்சியுள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி சாரதா கூறுகையில், "எனது கணவர் அடிக்கடி சைக்கோ போல நடந்து கொள்வார். திடீரென மரத்தை வெட்டுவார். எப்போதும் ஏதாவது முணு முணுத்துக்கொண்டே இருப்பார். கோபத்தில் ஆவேசமாக திட்டுவார். உறவினர்களை அடிப்பார். அடிக்கடி சாமியும் ஆடுவார்" என கூறியுள்ளார். 


Advertisement