இந்தியா லைப் ஸ்டைல்

மிகப்பெரிய ராஜநாக பாம்பை தண்ணீர் ஊற்றி தலை குளிப்பாட்டும் நபர்..! நடுங்கவைக்கும் பகீர் வீடியோ..!

Summary:

Man give bath to king cobra video goes viral

நபர் ஒருவர் மிகப்பெரிய ராஜ நாக பாம்பு ஒன்றை தலையில் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு முக்கிய காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான். அதிலும், ராஜநாகம் போன்ற கொடிய விஷம் கொண்ட பாம்புகள் என்றால் சொல்லவே தேவை இல்லை.

இந்நிலையில் நபர் ஒருவர் பக்கெட் ஒன்றில் நீரை நிரப்பு அங்கு நின்றுகொண்டிற்கும் ராஜநாக பாம்பின் தலையில் ஊற்றி குளிப்பாட்டுகிறார். பாம்பை பார்க்கும்போதே நமக்கு நடுங்கும் நிலையில் இந்த நபரின் செயலை பார்க்கும் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

குறிப்பிட்ட காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசந்தா நந்தா அவர்கள், பாம்பை குளிப்பாட்டும் அந்த நபரின் பெயர் வாவா சுரேஷ் என்றும், அவர் ஒரு வனவிலங்கு ஆர்வலர் மற்றும் பாம்பு நிபுணர் என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் இதுபோன்ற பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டுவிடும் வேலையை பார்த்து வருகிறாராம் அந்த இளைஞர்.


Advertisement