இந்தியா லைப் ஸ்டைல் சமூகம்

அடுத்ததாக பாலியல் புகாரில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்; சின்மயி அதிரடி ட்விட்..!!

Summary:

Malinga in sexual harassment

பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார்.

மேலும் பாலியல் தொல்லைகளில் சிக்கிய பலர் பாடகி சின்மயிடம் தங்களது குறைகளை கூறி வருகின்றனர். இதனை சின்மயி அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாக வெளியிட்டு வருகிறார். இதில் பல பிரபலங்கள் சிக்கி வருகின்றனர்.

இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தற்போது சிக்கியுள்ளார். ஐபிஎல் தொடரின் போது மும்பையில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மலிங்கா ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். தற்போது அந்த பெண் அங்கு நடந்த சம்பவத்தைப் பற்றி சின்மயியிடம் பகிர்ந்துள்ளார்.

அதில்,  நானும் என் தோழியும் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த அதே ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தோம். அப்பொழுது வெளியில் சென்றிருந்த எனது தோழியை காணவில்லை. எனவே அவளை தேடி நான் வெளியில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த மலிங்கா உங்களது தோழி எனது அறையில் தான் இருக்கிறார் என்று கூறினார்.

அதனை நம்பி நானும் அவரது அறைக்குள் சென்றேன். அப்பொழுது திடீரென்று கதவினை சாத்திய மலிங்கா என்னை கட்டிலில் தள்ளிவிட்டார். பின்னர் எனது மேலேறி தகாத செயல்களை செய்யத் துவங்கினார். உடலளவில் பலமாக இருந்த மலிங்காவை என்னால் சமாளிக்க முடியவில்லை.

பின்னர் ஹோட்டல் உதவியாளர் கதவைத் தட்டவே மலிங்கா எழுந்து சென்று கதவைத் திறந்தார். அந்த சமயத்தில் நான் குளியல் அறைக்குள் ஒளிந்துகொண்டேன். பின்பு எனது முகத்தை கழுவிவிட்டு உதவியாளர் சென்ற உடன் அவரது அறையிலிருந்து வெளியில் ஓடி வந்துவிட்டேன்.

இதனை நான் யாரிடமாவது கூறினால் நான் தான் வேண்டுமென்றே அவரது அறைக்குள் சென்றேன் என்று கூறி விடுவார்களோ என்ற அச்சத்தில் யாரிடமும் வெளியில் சொல்லவில்லை. இவ்வாறு அந்தப் பெண் சின்மயிடம் பகிர்ந்துள்ளார்.


Advertisement