சிறுநீரகத்தை மோசமாக செயலிழக்க வைக்கும் முக்கியமான நான்கு காரணங்கள்..! இதை நிறுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை காப்பாற்றுங்கள்.!

சிறுநீரகத்தை மோசமாக செயலிழக்க வைக்கும் முக்கியமான நான்கு காரணங்கள்..! இதை நிறுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை காப்பாற்றுங்கள்.!



major-reasons-for-kidney-failure-details-in-tamil

நமது உடலில் உள்ள மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். உடலில் உள்ள அனைத்து நச்சுகள் மற்றும் கழிவுகளை நமது இரத்தத்தில் இருந்து சுத்தப்படுத்தி, அவற்றை வெளியேற்ற சிறுநீரகம் பயன்படுகிறது. சிறுநீரகங்களில் ஏதேனும் சிக்கல் இருந்தால் உடல் சரியாக செயல்பட முடியாது.

நமது உடலுக்கு மிகவும் பயனுள்ள இந்த சிறுநீரகங்கள் நாம் செய்யும் சில தவறுகள் மற்றும் பழக்கவழக்கங்களால் பாதிப்படைகிறது. அவை என்னவென்று பார்க்கலாம் வாங்க..

Health

* சிலருக்கு இனிப்பு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். நீங்கள் அதிக இனிப்பு பொருட்களை உட்கொண்டால் அவை உங்கள் உடலில் சோடியம் மற்றும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது, மேலும் சோடியம் சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது, இதன் காரணமாக சிறுநீரகங்களுக்கு வடிகட்டுவதில் சிக்கல் ஏற்பட்டு உங்கள் சிறுநீரகம் செயலிழக்க வழிவகுக்கிறது.

* அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என பழமொழி உண்டு. அந்தவகையில், அளவுக்கு அதிகமாக நீங்கள் சாப்பிடும் காரணம் மற்றும் அசைவ பொருட்கள் சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும், இது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.

Health

* அதிக அளவு மருந்து மாத்திரை சாப்பிடுவதாலும் உங்கள் சிறுநீரகம் பாதிப்படைகிறது. மருத்துவரை ஆலோசிக்காமல் மருந்து உட்கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இதுபோன்று அளவுக்கு அதிகமாக மருந்து மாத்திரை சாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்கும்.

* சிறுநீரகம் பாதிப்படைய புகைபிடித்தல் முக்கிய காரணமாக அமைகிறது. சிகரெட் மற்றும் பீடியின் புகை உடலை அடையும் போது, ​​அது உடலில் உள்ள நச்சு கூறுகளை அதிகரிக்கத் தொடங்குகிறது. இதுபோன்ற நச்சுக்களை வட்டிக்காட்டும்போது சிறுநீரகம் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன, இதனால் மெதுவாக சிறுநீரகம் மோசமாகிறது, எனவே நீங்கள் புகைபிடித்தால் அந்த பழக்கத்தை இன்றே விட்டு விடுங்கள்.