உடலில் மச்சம் எங்கு இருந்தால்? என்ன பலன்?.. அசத்தல் தகவல் இதோ.. இளைஞர்களே தெரிஞ்சிக்கோங்க.! 



macham-tips-tamil

 

தனிநபரின் உடலில் இருக்கும் மச்சத்திற்கு அறிவியல் ரீதியாக தோலுக்கு நிறைந்த வழங்கும் மெலனின் நிறமி சுரப்பு காரணம் என்ற விளக்கம் இருப்பினும், ஜோதிடத்தின்படி கிரகங்கள் காரணம் என்றும் கூறப்படுகிறது. 

அறிவியலா ஆன்மீகமோ எதுவாக இருப்பினும், பலரும் எதிர்பார்க்கும் மச்சத்தின் பலன்கள் குறித்து இன்று நாம் தெரிந்துகொள்ளலாம். 

ஆண்களுக்கு இடது மார்பில் மச்சம் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு பல ஆண் குழந்தைகள் பிறப்பார்கள். பெண்களிடம் பழகி நற்பெயருடன் இருப்பார்கள். வலதுபக்க மார்பின் மேல்பகுதியில் மச்சம் கொண்டவர்கள் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் குணம் கொண்டவராக இருப்பர்.

புருவத்தில் இரண்டு புருவத்திற்கு நடுவே மச்சம் கொண்டவர்கள் தீர்க்க ஆயுளுடன் இருப்பர். வலது புருவ மச்சம் கொண்டவருக்கு அழகான, அதிஷ்டமான பெண் மனைவியாக கிடைப்பார். வலது பொட்டில் மச்சம் கொண்டவர்கள் பெயர், புகழோடு வாழுவர். செல்வமும் வரும். இடது புருவத்தில் மச்சம் கொண்டவர்களுக்கு பணக்கஷ்டம் கொண்ட வாழ்க்கை அமையும்.

வலது கண்களில் மச்சம் கொண்டவர் உறவினருடன் நல்லுறவில் இருப்பார். உறவினரின் உதவியால் புகழ் கிடைக்கும். கண்ணின் வெண்படலத்தில் மேல்பகுதி மச்சம் கொண்டவர் ஆன்மீக எண்ணம் கொண்டவராக இருப்பர். கண்களில் வெண்படலத்தில் கீழ்ப்பகுதி மச்சம் கொண்டவருக்கு பிரச்சனைகள் உண்டாகும். வெளிப்புற பக்கவாட்டில் மச்சம் கொண்டவருக்கு சீரான வாழ்க்கை கிடைக்கும். இடதுகண்களில் வெண்படல மச்சம் வறுமையான வாழ்வினை தரும். ஆயினும் அதனை கையாண்டுவிடுவார்.

மூக்கின் மேல்புற மச்சம் கொண்டவருக்கு வாழ்க்கையில் நன்மைகள் கிடைக்கும். இடர்பாடுகள் இருக்காது. மூக்கின் வலப்புறம் மச்சம் கொண்டவரின் தொட்ட காரியம் சிறப்பாகும். இடப்புறம் மச்சம் கொண்டவர்கள் எதையும் எளிதில் நம்பாத குணம் கொண்டவராக இருப்பார்கள். தவறான பெண்களின் நட்பு கிடைக்கலாம். நுனிமூக்கில் மச்சம் கொண்டவர்கள் கர்வமுற்று, கூச்ச சுபாவம் கொண்டவராக இருப்பர்.

மேல் அல்லது கீழ் உதடுகளில் மச்சம் கொண்டோர் காதல் நாயகனாக இருப்பர். மேல் வாயில் மச்சம் கொண்டவர்கள் பெயர், புகழ் என சிறந்து வாழ்வர். மேல் உதட்டின் இடப்பக்கம் மச்சம் கொண்டவர்களுக்கு பள்ளம்-மேடு நிறைந்த வாழ்க்கை கிடைக்கும். கல்வி, ஞானம் குறைந்தே இருக்கும். மேல்வாயின் அடிப்பக்கம் மச்சம் கொண்டவர் இசை பிரியராக இருப்பர்.

Macham

வலப்பக்க காதின் மேல்நுனியில் மச்சம் கொண்டவர்கள் தண்ணீரில் கண்டம் உள்ளவராக இருப்பர். இடது காதின் மேல்நுனி மச்சம் கொண்டவர் பெண்கள் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நலம். இரண்டு காதிலும் மச்சம் கொண்டவர்கள் அதிஷ்டம் மிக்க நபராக, பிறரை ஈர்ப்பவராக இருப்பார்கள்.

தொண்டைப்பகுதியில் மச்சம் கொண்டவர்களுக்கு திருமண உறவில் சொத்துக்கள் கிடைக்கும். கழுத்தின் வலப்புறம் மச்சம் இருக்கும் பட்சத்தில் பங்காளிகள், நண்பர்களின் மூலமாக பெயர், புகழ், சொத்துக்கள் கிடைக்கும்.

வயிற்றில் மச்சம் கொண்டவர்களுக்கு பொறாமை குணம் இருக்கும். இடப்புற வயிற்றுப்பகுதியில் மச்சம் கொண்டோர் கடின உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டு இருப்பார்கள், நல்ல உள்ளம் உடையவராகவும் இருப்பர். கீழ்ப்புற வயிற்று மச்சம் கோனார் பலவீனமாக இருப்பர். தொப்புள் பகுதியில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை அமையும், சமைப்பதில் வல்லவராக இருப்பர். 

கட்டை விரல் மச்சம் கொண்டோர் மகிழ்ச்சியாகவே எப்போதும் இருப்பர். ஆட்காட்டி விரல் மச்சம் கொண்டோர் தலைமைப்பண்பில் இருப்பர். நடுவிரல் மச்சம் கொண்டோர் கலை சார்ந்த விஷயங்களில் சிறந்து இருப்பர். மோதிரவிரல் மச்சம் அழகிய தோற்றம், அம்சமான உடற்கட்டு கொண்டவரை வெளிப்படுத்தும். எதிரிகளையும் தகர்த்தெறிவார்.

முதுகில் மச்சம் கொண்ட ஆண்கள் அதிஷ்டம், கடவுள் பக்தி நிறைந்தவராக இருப்பார்கள்.

பாதத்தில் மச்சம் கொண்டவர் கடின உழைப்பாளியாக இருப்பார். அடி பாதத்தில் மச்சம் கொண்டவருக்கு வாழ்க்கையில் கஷ்டம், நஷ்டம், குற்றம் என இடர்பாடுகள் இருக்கும்

வலப்பக்க தொண்டையில் மச்சம் கொண்டோர் சிறந்த வேலையில் இருக்கும் மனைவியை துணையாக பெறுவார்கள். இடப்பக்க தொண்டையில் மச்சம் கொண்டோர் திருமணம் வாழ்க்கை சிக்கலாக அமையலாம். மனைவி மற்றும் குழந்தைகளால் கஷ்டம் அதிகரிக்கும். வலப்பக்க முழங்காலில் மச்சம் பெற்றோர் வெற்றியாளராக இருப்பார். இடப்பக்க முழங்காலில் மச்சம் கொண்டோருக்கு பெண்கள் தொல்லையாக இருப்பார்கள். 

அந்தரங்கத்தில் பிறப்புறுப்பின் மீது மச்சம் கொன்றவர் புத்திசாலித்தனம், ஆளுமைத்திறன் கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் பேச்சுத்திறனும் உள்ளவர்கள். அதிலும் பெண்களை ஏற்பவர்கள். தாம்பத்திய விஷயத்திலும் சிறப்பாக செயல்படும் நபர்கள் இவர்களே.