லைப் ஸ்டைல் 18 Plus

கணவன் மனைவி இணைந்து அதுபோன்ற படம் பார்த்தால் அந்த பிரச்சனை வரவே வராதாம்!

Summary:

Love movies are reducing divorce cases

இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் கணவன் மனைவிக்குள் பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒன்றாக மாறிவிட்டது. இதை எப்படி சரி செய்வது?  இதுபோன்ற வழக்குகளை குறைக்க என்ன வழி?  இதுகுறித்த ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவரான ரொனால்டு ரோக்.

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில் கணவன் மனைவி இருவரும் இணைந்து படம் பார்ப்பதன் மூலம் விவாகரத்து வழக்குகளை பாதியாக குறைக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக ரொமான்ஸ் மற்றும் காதல் காட்சிகள் நிறைந்த படங்களை பார்க்கும்போது கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் சண்டைகள் குறைந்து, இருவரும் விரைவில் சமாதானம் அடைவதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.

தன்னிடம் ஆலோசனைக்காக வரும் தம்பதிகளிடம் இந்த யோசனையை கூறியதாகவும், முதல் மூன்று ஆண்டுகளில் 24 சதவீதமாக இருந்த விவாகரத்து வழக்கு தற்போது 11 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் மருத்துவர் ரொனால்டு ரோக் கூறியுள்ளார்.

கணவன் மனைவி இணைந்து காதல் படங்களை பார்க்கும்போது அந்த கதாபாத்திரங்கள் தங்கள் காதலை எப்படி அணுகுகின்றனர், சண்டைகள் எப்படி சமாதானம் ஆகிறது? இது போன்ற விஷயங்களை தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதாகவும், இந்த விஷயங்கள் அவர்களது வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.


Advertisement