சாக்கடைக்குள் சரசரவென புகுந்த 10 அடி பிரம்மாண்ட ராஜநாகம்! தவளையை பிடித்து விழுங்கிய கொடூர காட்சி!



giant-king-cobra-in-drainage-viral-video

இயற்கையின் அசாதாரண நிகழ்வுகள் மனிதர்களை எப்போதும் வியப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்துகின்றன. அந்த வரிசையில், குடியிருப்பு பகுதி அருகிலுள்ள சாக்கடை கால்வாயில் ராட்சத ராஜநாகம் வேட்டையாடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

சாக்கடையில் வேட்டையாடிய பிரம்மாண்ட பாம்பு

சுமார் 3 மீட்டர் நீளம் கொண்ட அந்த பிரம்மாண்ட பாம்பு, சாக்கடைக்குள் இருந்த ஒரு தவளையை மிக லாவகமாகப் பிடித்து விழுங்கியது. அருகில் இருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்தபோதும், எந்த அச்சமும் இன்றி தனது இரையை உண்பதில் முழுமையாக கவனம் செலுத்தியது.

பீதியில் உறைந்த மக்கள்

"காட்டுல இருக்க வேண்டியது இங்க என்ன பண்ணுது?" என அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டு வைரல் வீடியோவாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: தெய்வீக அதிசயமா? ஆற்றில் நீந்தி வந்த 7 தலை ராட்சத பாம்பு...! பீதியில் உறைந்த கிராம மக்கள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ !!

பாதுகாப்பு குறித்து கவலை

"பாம்பு தவளையை சாப்பிடாம புல்லையா சாப்பிடும்?" என சிலர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்தாலும், குடியிருப்பு பகுதிகளுக்கு இவ்வளவு பெரிய பாம்புகள் வருவது பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரிப்பது சுற்றுச்சூழல் மாற்றங்களின் விளைவாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை அலட்சியம் செய்யாமல், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.