பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000.... வாங்கலையா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!! மிஸ் பண்ணிட்டாத்தீங்க.....!!



tamil-nadu-pongal-gift-collection-extension

தமிழக அரசின் சமூக நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்க உதவி பெற தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வேலை, பயணம் போன்ற காரணங்களால் தவறவிட்டவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

விடுபட்டவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பரிசுத் தொகுப்பும் ரொக்கப் பணமும் வழங்கியது. குறிப்பிட்ட தேதிக்குள் பெற முடியாத பொதுமக்களின் நலன் கருதி, விடுபட்டவர்களுக்கும் இந்த உதவியை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரேஷன் கடைகளில் பெறலாம்

இதன் அடிப்படையில், இதுவரை பொங்கல் பரிசைப் பெறாதவர்கள் தங்களது பகுதியிலுள்ள நியாய விலை கடைகளுக்கு சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பரிசுத் தொகுப்பும் ரொக்கப் பணமும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சூப்பர் அறிவிப்பு! ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.3000.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!

96% பயனாளிகள் பெற்றனர்

தமிழகத்தில் சுமார் 96% பேர் இந்த பரிசுத் தொகுப்பைப் பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொலைதூர பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் உள்ளிட்ட 4% பேர் இதனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கி கணக்கில் பணம் செலுத்த கோரிக்கை

இதையடுத்து, ரூ.3000 ரொக்க உதவியை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பொங்கல் பணத்தை இன்னும் பெறாதவர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மூலம் விடுபட்ட அனைத்து தகுதியுள்ள பயனாளிகளும் பயன்பெறுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கும் அதிகாரிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: குஷியோ குஷி! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000....தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!