தாய்லாந்து பெண்களை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்த இந்தியர்கள்! எதற்காக தெரியுமா?

தாய்லாந்து பெண்களை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்த இந்தியர்கள்! எதற்காக தெரியுமா?



indian men made fake marriage of thailand girls

தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் தாய்லாந்து அரசாங்கம் முழுவீச்சுடன் இறங்கியுள்ளது. 

இந்த நடவடிக்கையில் இதுவரை 10 இந்தியர்கள் மற்றும் 24 தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தாய்லாந்தில் குடியுரிமை பெற வேண்டும் என்பதற்காக போலியாக சான்றிதழ் அளித்து திருமணம் செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்களை போல் மேலும் பத்து இந்தியர்களும் 6 தாய்லாந்து பெண்களும் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

thailand

தாய்லாந்து குடியுரிமை பெறுவதற்காக போலியாக சான்றிதழ்கள் தயாரித்து  பலர் போலி திருமணம் செய்து தாய்லாந்தில் தங்கியிருப்பதாக தாய்லாந்து அரசிற்கு சந்தேகம் வந்துள்ளது. அதன்பேரில் தொடர்ந்த விசாரணையில் 30 இந்தியர்கள் 30 தாய்லாந்து பெண்களை போலியாக திருமணம் செய்து சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து தான் இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் தாய்லாந்தில் தங்கி பல்வேறு சட்ட விரோத தொழில்கள் செய்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இவர்களில் சிலர் கடன் வழங்கும் தொழில், தவணை முறையில் பொருட்களை விற்பனை செய்தும் வந்துள்ளனர். தாய்லாந்தில் தங்கி தங்களது தொழிலை செய்ய வேண்டும் என்பதற்காக இவர்கள் தாய்லாந்து பெண்களை வாடகைக்கு எடுத்து போலி சான்றிதழ்கள் தயார் செய்து போலி திருமணம் செய்துள்ளனர்.

thailand

இவர்களின் இந்த சட்டவிரோத நடவடிக்கை போலீசாருக்கு தெரிய வரவே 30 இந்தியர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய 30 தாய்லாந்து பெண்களையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்பேரில் இதுவரை 10 இந்தியர்களையும் 24 தாய்லாந்து பெண்களையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பெண்களை போலீசார் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.