லைப் ஸ்டைல்

பிரியாணி மோகத்தால் வந்த விபரீதம்; பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமி கொடூர வாக்குமூலம்..!

Summary:

சென்னை குன்றத்தூர் பகுதியில் கள்ளகாதலுக்காக தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசில் சிக்கிய அந்த கொடூர தாய் அபிராமி நடந்த சம்பவங்களை பற்றி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விஜய் மற்றும் இவரது மனைவி அபிராமி என்பவரும் குன்றத்தூர் பகுதியில்  தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். விஜய் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

அபிராமிக்கு அவர் வீட்டின் அருகிலுள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் இல்லாத நேரங்களில் இருவரும் அவரது வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

மேலும் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், எங்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. எனது கணவர் ஏ டிஎம்- ல் பணம் நிரப்பும் பணியை செய்துவருகிறார்.  எனக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் அடிக்கடி ஓட்டலில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து, வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவேன்.

சுந்தரம் தான், வீட்டுக்கு பிரியாணியை எடுத்து வருவார். என்னிடம் இருந்த அன்பு காரணமாக ஒவ்வொரு முறையும் கூடுதலாக பிரியாணி கொண்டு வருவார். எங்கள் நட்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஏற்பட்டது. பின்பு அது காதலாக மாறி இருவரும் சந்தோசமாக இருந்தோம்.

எங்கள் கள்ளத்தொடர்பை என் அப்பா தெரிந்து கொண்டார், அதன் பின்பு அவர் என்னை கவனிக்க தொடங்கினர். இதை சுந்தரத்திடம் கூறினேன். அவர் உன் கணவர் மற்றும் குழந்தைகளை கொன்று விடு என்று ஐடியா மற்றும் தூக்க மாத்திரைகளை வாங்கி தந்தார்.

அதன்படி பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன். அதில் என் பெண் குழந்தை மட்டும் இறந்து போனது கணவரும், மகனும் இறந்து போகவில்லை.

கணவர் வேலைக்கு சென்ற பிறகு என் மகனை மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன். இரவு கணவரை கொலை செய்ய முடிவு செய்தேன். ஆனால் அன்று இரவு அவர் வீட்டிற்கு வரவில்லை. கணவர் காலையில் வந்தால் நான் சிக்கிக் கொள்வேன் என்பதால் இது குறித்து சுந்தரத்திடம் ஐடியா கேட்டேன்.

அவரது சொன்னதுபடி கோயம்பேட்டில் இருந்து கன்னியாகுமரிக்கு பஸ் ஏறினேன் என்று கூறியுள்ளார்.

வெளியூருக்கு தப்பி செல்வதற்கு பணம் இல்லை என்பதால் தன் கணவன் கட்டிய தாலி சங்கிலியை விற்று, பணத்தை எடுத்து கொண்டு கேரள மாநிலத்திற்கு செல்வதற்காக கோயம்பேடு சென்று பேருந்தில் தப்பி சென்றுள்ளார் அபிராமி.

இரு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அறிந்து போலீசார் அபிராமியை தேடிவந்தனர். அபிராமி இருசக்கர வாகனத்தை கோயம்பேட்டில் விட்டு விட்டு வெளியூருக்கு தப்பித்துள்ளார் என்பதை பொலிசார் உறுதி செய்தனர்.

இந்த வழக்கில் பெற்ற குழந்தைகளை திட்டமிட்டு கொலை செய்த அபிராமியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement