பாம்பு அடிக்கடி கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா.? முழு விபரம் இதோ...

பாம்பு அடிக்கடி கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா.? முழு விபரம் இதோ...


If snake will come in your dreams

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பதை கேள்விப்பட்டிருப்போம். அவ்வகையான பாம்புகள் கனவில் வந்தால் என்னனென்ன நடக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

பாம்பு கனவில் வருகிறதென்றால், ஒன்று இதுநாள் வரை குலதெய்வ வழிபாடு செய்வது விடுபட்டிருந்தால், குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து உங்களுக்கு உணர்த்தும். நம்முடைய குல தெய்வம் கூட நாக வடிவத்தில் கனவில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டு வெளியில் போவது போல் கனவு வந்தால் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றவேண்டும். வீட்டில் உள்ள பிள்ளைகளுக்குத் திருமணம் நடைபெறலாம்.

snake

பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

கனவில் பாம்பை கொன்றாலோ அல்லது இறந்த பாம்பை கனவில் கண்டாலே உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகள், ஆபத்துகள் நீங்கப்போகிறது என்று அர்த்தம். ஒற்றைப்பாம்பினை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்பை கனவில் கண்டால் ஆபத்துகள் நீங்கி நன்மை உண்டாகும்.

snake

நாகப்பாம்பு நம் தலைக்குமேல் குடை பிடிப்பது போன்றோ, பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால் வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.அடிக்கடி பாம்பு கனவு வந்தால் அம்மன் கோவிலுக்கும் சிவன், முருகன் ஆலயத்திற்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வணங்கலாம்.