ஒரே வியர்வை நாற்றமா இருக்கா..? வியர்வை நாற்றத்தைப் போக்க இதை செய்தால் போதும்..!

ஒரே வியர்வை நாற்றமா இருக்கா..? வியர்வை நாற்றத்தைப் போக்க இதை செய்தால் போதும்..!


how-to-stop-sweating-under-arms-tips-in-tamil

பொதுவாக மனிதர்கள் என்றாலே சுயமரியாதை மிகவும் முக்கியம் என நினைப்பவர்கள். அதேநேரம் எந்த ஒரு இடத்திலும் தலை நிமிர்த்து இருக்கவேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள்.

ஆனால், மஞ்சள்கரை படிந்த பற்கள், வியர்வை நாற்றம் போன்ற பல காரணங்களால் இந்த சுயமரியாதை, சுயநம்பிக்கை போன்றவை பாதிக்கப்படுகிறது. அந்தவகையில், உடலால் ஏற்படும் இந்த வியர்வை துர்நாற்றத்தை எப்படி போக்குவது என்று பார்க்கலாம் வாங்க.

health tips

* கிருமி நாசினியாக பயன்படும் மஞ்சளை தேய்த்து அக்குள் பகுதிகளில் தேய்த்துவர வியர்வை துர்நாற்றம் மறைந்து மஞ்சள் மனம் கமழும்.

* ஒரு பாக்கெட் நீரில் தக்காளி பழத்தை பிழிந்து குளித்துவந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.

* புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்துவந்தால் வியர்வை வாடையும் இருக்காது. நறுமணம் வீசும்.

health tips

* எலுமிச்சை நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. அந்த வகையில், குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறை பிழிந்து குளித்துவர வியர்வை நாற்றம் மறையும்.

* தயிரை உடலில் அதிகம் வியர்வை வரும் பகுதிகளில் தேய்த்து குளித்துவர வியர்வை நீங்கி சருமம் அழகாகும்.