வீட்டில் கடலைமாவு, அரிசிமாவு சும்மா இருக்கா?..! சுவையாக பஜ்ஜி செய்யலாம் வாங்க..!!

வீட்டில் கடலைமாவு, அரிசிமாவு சும்மா இருக்கா?..! சுவையாக பஜ்ஜி செய்யலாம் வாங்க..!!



How to prepare Vengaya Bajji

அனைவருக்கும் பிடித்த வெங்காய பஜ்ஜி எப்படி செய்வது என்று தற்போது காணலாம் 

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - தேவைக்கேற்ப 
உப்பு - தேவைக்கேற்ப 
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை 
ஓமம் - 1/4 தேக்கரண்டி 
அரிசி மாவு - 1/4 கப் 
கடலை மாவு - 1/2 கப் 
வெங்காயம் - 2 
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி தண்ணீர் - தேவைக்கு ஏற்ப

செய்முறை :

★முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி, வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

★பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசிமாவு சேர்த்து அதனுடன் ஓமம், மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா, உப்பு, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு பிசைய வேண்டும்.

★இறுதியாக ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத் துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான வெங்காய பஜ்ஜி தயாராகிவிடும்.