புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
வெண்டைக்காய் இன்றளவில் குறைந்த விலையில் காய்கறி கடையில் விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் வெண்டைக்காயில், இன்று சுவையான மோர்க்குழம்பு செய்வது எப்படி என காணலாம். பொதுவாக மோர்க்குழம்பு பூசணியில் செய்வார்கள். வெண்டைக்காயில் மோர்க்குழம்பு செய்யலாம்.
வெண்டைக்காய் மோர்க்குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 300 கிராம்,
லேசான புளிப்புடன் தயிர் - 3 கப்,
பச்சை மிளகாய் - 6,
சீரகம் - அரை கரண்டி,
துவரம் பருப்பு - 1 கரண்டி
அரிசி - 1 கரண்டி,
கடலைப்பருப்பு - 1 கரண்டி,
துருவிய தேங்காய் - அரை கப்,
கறிவேப்பில்லை, கொத்தமல்லி - தேவையான அளவு,
கடுகு - 1 கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு,
வரமிளகாய் - 6,
மல்லி விதைகள் - 1 கரண்டி,
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி ஆகியவற்றை 15 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் வெண்டைக்காயை நீளவாக்கில் இரண்டு அல்லது மூன்றாக பிளந்து நறுக்கிக்கொள்ள வேண்டும்.
ஊறவைத்த பருப்பு, அரிசி, மிளகாய், சீரகம், தேங்காய் துருவல், சிறிதளவு கறிவேப்பில்லை ஆகியவற்றை மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். தயிரை நன்கு அடித்து மோராக்கி, அதில் உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின் வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு-உளுந்து சேர்ந்து, வெண்டைக்காயை இட்டு வதக்க வேண்டும். வெண்டைக்காய் வதங்கியதும் மோரை சேர்த்து, மிதமான தீயில் வைக்க வேண்டும்.
மோர் கொதிக்க தொடங்கியதும், கறிவேப்பில்லை கொத்தமல்லி தூக்கி, சிறிதளவு பெருங்காயம் சேர்த்து அரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறினால் சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு தயார்.