வைட்டமின், நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் தோசை.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!!

வைட்டமின், நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் தோசை.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!!



How to prepare oats dosa

ஓட்ஸில் உள்ள வைட்டமின்களும், நார்ச்சத்துகளும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. இன்று ஓட்ஸ் தோசை எப்படி செய்வது என்பது குறித்து காணலாம்.

தேவையான பொருட்கள் : 

ஓட்ஸ் - 6 கப் 

அரிசி மாவு - நான்கு கரண்டி 

சோளமாவு - நான்கு கரண்டி 

வெங்காயம் - இரண்டு 

பச்சை மிளகாய் - 4 

தயிர் - 4 ஸ்பூன் 

சீரகம் - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு 

கருவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடிபொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

★சிறிது வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். சீரகம் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்துகொள்ள வேண்டும்.

★தயிர், அரிசி மாவு, சோள மாவு, பச்சைமிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்கு மாவு பதத்திற்கு கொண்டு வந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 

★இறுதியாக அதனோடு வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தோசைகல்லில், மாவை தோசை போல ஊற்றி எடுத்தால் சுவையான ஓட்ஸ் தோசை தயார்.