வீட்டில் மைதாமாவு சும்மா இருக்கா?.. மொறுமொறுவென மைதாமாவு தோசை செய்யலாம் வாங்க..!!

வீட்டில் மைதாமாவு சும்மா இருக்கா?.. மொறுமொறுவென மைதாமாவு தோசை செய்யலாம் வாங்க..!!



how-to-prepare-maida-dosa

வீட்டிலிருக்கும் மைதா மாவை வைத்து அருமையான தோசை எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு - முக்கால் கப் 
மைதா மாவு - ஒரு கப் 
சின்ன வெங்காயம் - 15 
பச்சை மிளகாய் - 2 
உப்பு - தேவைக்கேற்ப 
கொத்தமல்லி - சிறிதளவு 
சீரகம் - கால் தேக்கரண்டி 
கடுகு - அரை தேக்கரண்டி 
மிளகு - 10 
எண்ணெய் - தேவைக்கேற்ப கருவேப்பிலை - ஒரு கைப்பிடி

செய்முறை :

★முதலில் வெங்காயம், கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

★ பின் மிளகை கொரகொரப்பாக உடைத்துக் கொள்ள வேண்டும்.

★அடுத்து பச்சரிசி மாவு, மைதா, உப்பு ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து தோசைக்கு மாவு கரைப்பது போல கரைத்துக் கொள்ள வேண்டும்.

★ஒரு வானலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, மிளகு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் கொட்ட வேண்டும். அதனுடன் கொத்தமல்லி தழையும் சேர்த்து கலக்கவும்.

★இறுதியாக சூடான தோசைக்கல்லில் மாவை எடுத்து, தோசைகளாக ஊற்றி நன்றாக மொறுமொறுவென சிவக்க வெந்ததும் எடுத்தால் மைதாமாவு தோசை தயாராகிவிடும்.