புரதச்சத்து நிறைந்த கம்பு லட்டு.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?..!



How to prepare kambu laddu

புரதச்சத்து நிறைந்த கம்பு லட்டு எப்படி செய்வது என விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

சிறுதானியத்தில் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்த வகையில் கம்பு உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. 

தேவையான பொருட்கள் :

வெல்லம் - இரண்டு கப் 

ஏலக்காய் - 10 

கம்பு மாவு - இரண்டு கப் 

பாதாம் - 10 

பிஸ்தா - 10 

முந்திரி - 10 

எண்ணெய் - தேவைக்கேற்ப

தண்ணீர் - தேவையான அளவு

healthy tips

செய்முறை :

★முதலில் எடுத்துக கொண்ட பாத்திரத்தில் கம்பு மாவை சேர்த்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சேர்ந்து கொள்ள வேண்டும்.

★முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா என அனைத்தையும் தனித்தனியே வறுத்தெடுத்து மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

★பின்னர் வெல்லம் சேர்த்து பாகு எடுத்து அரைத்த மாவு, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து நன்றாக கிளறி லட்டு பதத்திற்கு வந்ததும் லட்டுகளாக பிடித்து எடுத்தால் சுவையான கம்பு லட்டு தயார்.