நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிக்கன் வெஜிடபிள் சூப்..! வீட்டிலேயே செய்வது எப்படி?..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிக்கன் வெஜிடபிள் சூப்..! வீட்டிலேயே செய்வது எப்படி?..!!



How to prepare chicken vegetable soup

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிக்கன் வெஜிடபிள் சூப் வீட்டிலேயே எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்திதொகுப்பு.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காய்கறிகள், சிக்கன் சேர்த்து செய்யும் சூப் மிகவும் நல்லது. இது உடலுக்கு பல விதமான நன்மைகளையும் வாரி வழங்குகிறது.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - ஒன்று

காளான் - ஒரு கப்

சிக்கன் - கால் கிலோ

கேரட் - மூன்று

பீன்ஸ் - 3

முட்டைக்கோஸ் - சிறிய துண்டு

தனி மிளகாய் தூள் - அரை டேபிள் ஸ்பூன்

பெருஞ்சீரகம் - தேவைக்கேற்ப

இஞ்சி,பூண்டு - தேவைக்கேற்ப

மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - தேவையான அளவு

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

Chicken vegetable soup

செய்முறை :

★முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வேகவைக்க வேண்டும்.

★பின் பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை சற்று கொரகொரப்பாக தட்டி வைக்கவும்.

★அடுத்து வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

★காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டியபின், கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி பின் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.

★தேவையான அளவு உப்பு சேர்த்தபின் மிளகாய்தூள் சேர்த்து சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி காய்கறிகளை வேகவிட வேண்டும்.

★அடுத்து வேகவைத்த சிக்கனையும் சேர்த்து உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்க வேண்டும்.

★இறுதியாக காய்கறிகள் மற்றும் சிக்கன் வெந்துவிட்டதா? என சரிபார்த்து இறக்கினால் சிக்கன் வெஜிடபிள் சூப் தயார்.