நாவை தித்திக்கவைக்கும் சுவையான கேரட் அல்வா.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!

நாவை தித்திக்கவைக்கும் சுவையான கேரட் அல்வா.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!


How to Prepare Carrot Halwa tamil

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பால்கோவா சேர்த்த கேரட் அல்வா எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

பால்கோவா - கால் கப் 
சர்க்கரை - ஒரு கப் 
துருவி கேரட் - மூன்று கப் 
நெய் - அரைக்கப் 
திராட்சை - ஒரு தேக்கரண்டி 
முந்திரி - ஒரு தேக்கரண்டி 
எண்ணெய் - தேவைக்கேற்ப 
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி

health tips

செய்முறை :

★முதலில் முந்திரி மற்றும் பாதாமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

★பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நெய் சேர்த்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.

★எண்ணெய் சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வருக்க வேண்டும்.

★பின் துருவி வைத்த கேரட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

★கேரட் வெந்ததும் சர்க்கரை மற்றும் பால்கோவாவை போட்டு, கேரட்டோடு ஒன்றாக சேறுமாறு கிளறிவிட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்துக் கொள்ளவும்.

★சர்க்கரை உருகியதும் பொடித்து வைத்த ஏலக்காய்தூளை போட்டு நன்கு கிளற வேண்டும்.

★இறுதியாக 2 தேக்கரண்டி நெய் சேர்த்து அல்வா இளகிய பதம் இருக்கும்போதே இறக்கி, துருவிய பாதாம் துண்டுகளை மேல் தூவி பரிமாறினால் சூடான, சுவையான கேரட் அல்வா தயாராகிவிடும்.