"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
சண்டே ஸ்பெஷல்: குழந்தைகளுக்கு பிடித்த சுவையான அப்பள சமோசா செய்வது எப்படி?.!
சண்டே ஸ்பெஷல்: குழந்தைகளுக்கு பிடித்த சுவையான அப்பள சமோசா செய்வது எப்படி?.!

குழந்தைகள் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக பப்ஸ், சமோசா போன்றவற்றை சாப்பிடுவார்கள். தற்போது வித்தியாசமாக அப்பளம் சமோசா எப்படி செய்வது என்று காணலாம்.
தேவையான பொருட்கள் :
காய்கறி பொரியல் - 50 கிராம்
அப்பளம் - 10
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் ஒரு அப்பளத்தை தண்ணீரில் நனைத்து உடனடியாக அதனை பாதியாக கட் செய்து, பாதியின் இரு முனைகளையும் நன்றாக கைகளால் அழுத்தி ஒட்டி கோன் வடிவத்தில் செய்ய வேண்டும்.
★இதனுடன் காய்கறி பொரியலை வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி விடவும்.
★இது போன்ற அனைத்தையும் செய்த பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடாகியதும், செய்து வைத்த சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் அப்பளம் சமோசா தயாராகிவிடும்.