நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
கசப்பு சுவை இல்லாமல் வெந்தய குழம்பு செய்வது எப்படி? சூப்பர் டிப்ஸ் இதோ.!
வெந்தயம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் நிலையில், அதில் சுவையான குழம்பு செய்வது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
விரும்பி சாப்பிடலாம்..
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெந்தயத்தை பலரும் கசப்பு தன்மை காரணமாக ஒதுக்குவது உண்டு. ஆனால், வெந்தயம் கொண்டு களி, குழம்பு, ரசம் ஆகியவை செய்யலாம். இதில் வெந்தய குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதில் கசப்பு சுவை வராமல் குழம்பு செய்து கொடுத்தால், குழந்தைகள் முதல் வெந்தயக்குழம்பு பிடிக்காதவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.. பிரஷர் குக்கர் வெடிக்காமல் இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்.!
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 50,
தக்காளி - 4,
பூண்டு - 20 பற்கள்,
காய்ந்த மிளகாய் - 7,
மஞ்சள் தூள் - 2 கரண்டி,
குழம்பு மசாலா - 4 கரண்டி,
புளி - 2 நெல்லிக்கனி அளவு,
பெருங்காயப்பொடி - தேவையான அளவு,
கடுகு - அரை கரண்டி,
வெந்தயம் - 5 கரண்டி,
சீரகம் - அரைக்கரண்டி,
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
கொத்தமல்லி & உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* முதலில் வானெலியில் வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுக்க வேண்டும். இது நன்கு ஆறியதும் மிக்சியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
* பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். கடுகு வெடித்ததும் பூண்டு பற்கள், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
* வெங்காயம் கண்ணாடி பதத்துக்கு வந்ததும் நறுக்கிய தக்காளி & உப்பு சேர்க்க வேண்டும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், குழம்பு மசாலா, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
* மசாலா வாசம் போனதும் சிறிதளவு தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவேண்டும். குழம்பு நன்கு கெட்டியாகும் வரையில் சமைத்து இறுதியாக வெந்தயம் மற்றும் சீரகப்பொடி சேர்த்து சில நிமிடங்களில் இறக்கிவிட வேண்டும்.
இதையும் படிங்க: அப்டியே பளபளபளன்னு.. உங்க வீட்டு டைல்ஸ் மின்ன வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்.!