இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.. பிரஷர் குக்கர் வெடிக்காமல் இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்.!
குக்கரை சுத்தம் செய்யும் வழிமுறைகள் குறித்து தெரிந்துகொள்வது, எதிர்காலத்தில் அது தொடர்பான விபத்துகளை தவிர்க்க வழிவகை செய்யும்.
குக்கர்:
காலை நேரத்தில் அவசரமாக எழுந்து பள்ளி, கல்லூரி, வேலைகளுக்கு செல்லும் நபர்களின் சமையல் நேரத்தை மிச்சப்படுத்த பிரதானமாக சமைக்க பயன்படுத்தப்படும் பொருள் பிரஷர் குக்கர். அரிசி, பருப்பு, கிளறப்படும் சாதம், பிரியாணி போன்ற உணவுகளை சமைக்க இது பயன்படுத்தப்படுகிறது. என்னதான் குக்கரை பயன்படுத்திவிட்டு அதன் வெளிப்புறத்தை நன்கு நாம் சுத்தம் செய்தாலும், விசில் சத்தம் வரும் பகுதியை பெரும்பாலானோர் கவனிப்பது இல்லை.
இதையும் படிங்க: அப்டியே பளபளபளன்னு.. உங்க வீட்டு டைல்ஸ் மின்ன வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்.!

எப்படி சிக்கல்?
குக்கரின் கேஸ்கட் பகுதியில் சேரும் உணவுத்துகள்கள், எண்ணெய்ப்பிசுக்கு காரணமாக துர்நாற்றம் வீசும். நீராவி கசிவு ஏற்படும். இதனை தவிர்க்க இளம் சூடுள்ள நீர், வினிகர், பேக்கிங் சோடா கொண்டு குக்கரின் விசில் அமைப்பையும், துளையை சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல, கேஸ்கட் ரப்பர் அமைப்பையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அதே நேரத்தில், கேஸ்கட்டை சுத்தம் செய்ய வீரியம் நிறைந்த ரசாயனம் பயன்படுத்த வேண்டாம்.
இதையும் படிங்க: தொடர் மலச்சிக்கலால் அவதியா? தினமும் காலையில் இதை மறக்காம பண்ணுங்க.!