கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம் செய்யும் சிம்பிளான வழிமுறைகள்.!

கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம் செய்யும் சிம்பிளான வழிமுறைகள்.!


How to make delicious Kollu Rasam

கொள்ளு ரசம் உடலிலுள்ள கொழுப்புகளை குறைத்து, ஆரோக்கியத்தை வழங்குகிறது. இந்த கொள்ளு ரசத்தை மிக எளிமையாக செய்வது எப்படி? என்பது குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள் :

உப்பு - தேவையான அளவு

கடுகு, மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி, கருவேப்பிலை - 1 கைப்பிடியளவு

பூண்டு - ஆறு

காய்ந்த மிளகாய் - மூன்று

சீரகம், மிளகு - 1 டீஸ்பூன்

தக்காளி - இரண்டு

புளி - சிறிதளவு

கொள்ளு பருப்பு - ¼ கப்

Kollu Rasamசெய்முறை :

முதலில் கொள்ளு பருப்பை சுத்தம் செய்து, முதல் நாள் இரவு நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் காலை அதனை குக்கரில் நன்றாக வேக வைத்து, பின்பு ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுத்தபடியாக கொத்தமல்லி, தக்காளி போன்றவற்றை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்பு தனியாக புளியை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

Kollu Rasamபின்னர் கருவேப்பிலை, சீரகம், மிளகு, மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் நெய்யை விட்டு, அதில் கருவேப்பிலை, கடுகு இரண்டையும் சேர்த்து, தாளித்து அத்துடன் பொடியாக நறுக்கி வைக்கப்பட்டுள்ள தக்காளியை சேர்த்து, வதக்கிக் கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள் அத்துடன் கரைத்த புளியை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் இதனுடன் அரைத்த மிளகாய், கொள்ளு போன்றவற்றை சேர்த்து சற்றே கொதிக்கவிட்டு இறக்கி வைத்தால், சுவையான கொள்ளு ரசம் தயாராகிவிடும்.