மழைக்கால நோயிலிருந்து காப்பாற்றும் சுவையான கறிவேப்பிலை குழம்பு.!

மழைக்கால நோயிலிருந்து காப்பாற்றும் சுவையான கறிவேப்பிலை குழம்பு.!



how-to-make-curry-leaves-curry

சுவையான கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி என்பது குறித்து நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் : 

உப்பு- தேவையான அளவு 

புளி- சிறிய எலும்பிச்சை அளவு

தக்காளி- 3 

மிளகாய் தூள்-  2 டேபிள் ஸ்பூன்

குழம்பு தூள்- 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய்-2 டேபிள் ஸ்பூன் 

பெருங்காயத் தூள்- சிறிதளவு

சீரகம்- 1 டீஸ்பூன்

பூண்டு- 5

கடுகு- 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 2

சுண்ட வத்தல் 5

நல்லெண்ணைய்- 5 ஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கப்

எண்ணெய் - 2 ஸ்பூன்

health tips

செய்முறை : 

அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் சூடேறியவுடன், கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். கருவேப்பிலை நன்றாக வதங்கியவுடன் அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் மீண்டும் கடாயில் 5 ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி சுண்ட வத்தல் சேர்த்து, நன்கு வறுக்க வேண்டும். பின்னர் இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

பின்னர் வத்தல், 2 டீஸ்பூன் தேங்காய் சிறிதளவு இவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த எண்ணெயில் பூண்டு, வெங்காயம், சீரகம், மிளகாய், கடுகு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

health tipsபின்னர் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து, நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். மிதமான சூட்டில் வைத்து இரண்டு டீஸ்பூன் குழம்பு தூள் சேர்த்து, 3 தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக கொஞ்சம் வெந்நீர் சேர்த்து, அரைத்த கருவேப்பிலையை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் புளி தண்ணீரை சேர்க்க வேண்டும். சிறிய அளவிலான எலுமிச்சை அளவு கொண்ட புளி தண்ணீரை சேர்த்தால் போதுமானது.

அதன் பிறகு உப்பு சேர்த்து சுவையை பரிசோதித்து பார்க்கவும். பின்னர் சிறிதளவு மீண்டும் தண்ணீரை சேர்த்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.எண்ணெய் நன்றாக மிதக்குமளவிற்கு சுண்ட வைத்து அடுப்பை விட்டு இறக்கி வைக்கவும். இப்போது சுவையான கருவேப்பிலை குழம்பு ரெடி.