உடல் எடையை குறைக்க வேண்டுமா?.. 10 நாளில் 2 கிலோ குறையலாம்..! அசத்தல் ஹெல்த் டிப்ஸ்..!!

உடல் எடையை குறைக்க வேண்டுமா?.. 10 நாளில் 2 கிலோ குறையலாம்..! அசத்தல் ஹெல்த் டிப்ஸ்..!!


How to loss 10 days 2 kalori

ஒருவர் தனது உடலின் உயரத்திற்கு ஏற்ப எடையுடன் இருக்கும் பட்சத்தில் அவர் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. உயரத்திற்கு மீறிய உடல்நிலை ஆரம்ப கட்டத்திலேயே களையப்பட வேண்டிய ஒன்று. இல்லாத பட்சத்தில் அதனை குறைப்பது பெரும் சவாலாகவே மாறிவிடும்.

தற்போது உள்ள காலகட்டத்தில் இளம் வயதினர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடையை குறைப்பதில் பல்வேறு காரணங்களால் சிரமப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில எளிய முறைகள் மூலமாக நாம் உடல் எடையை குறைக்கலாம். அந்த வகையில் உடல் எடையை பத்து நாட்களில் எப்படி குறைப்பது? என்பதை இதில் காணலாம். 

health tips

தினமும் ஒரு மணிநேரம் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் தசைகள் வலுப்பெறும். உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் இரவுநேரத்தில் அதிக உணவுகளை எடுத்துக்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும்போது கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. சுண்டல், பழங்கள், எளிய உணவுகள் போன்றவற்றை ஆறு முறையாக ஒரு நாளைக்கு பிரித்து சாப்பிடலாம்.

health tips

நொறுக்கு தீனிகளை அறவே ஒதுக்குவது நல்லது. தினமும் ஒரு கப் அளவு 5 வகையான பழம் மற்றும் காய்கறிகளை பிரித்து சாப்பிடலாம். நாளொன்றுக்கு அமைதியாக கண்களை இறுக மூடி தியானம் செய்யலாம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 டம்ளர் தண்ணீராவது குடித்திருக்க வேண்டும். 

பகல் நேரத்தில் உறங்குவதை தவிர்த்து இரவில் கட்டாயம் உறங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 9000 அடி முதல் 10,000 அடி வரை எங்காவது நடந்து சென்று வரலாம். இவ்வாறாக செய்தால் 10 நாட்களில் உடல் எடையை குறைந்து விடும். அதற்கான மாற்றமும் தெரியும்.